உடுமலை, ஜூலை 27- அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் சங்கத்தின் 4ஆவது ஒன்றிய மாநாடு உடுமலையில் வெள்ளியன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் சித்ராதேவி தலைமை தாங்கி னார். சங்கத்தின் செயலாளர் எல்லம்மாள் அறிக்கையை முன்வைத்தார். தமிழக அரசு ஏற்றுக் கொண்ட ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின் படி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும். ஓய்வூதியம் ரூ.3,500 வழங்க வேண்டும். பல ஆண்டுகள் பதவி உயர்வு வழங்காமல் இருக்கும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் களை வேறு துறைகளில் பணியாற்ற நிர்ப்பந்திக்க கூடாது. பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள் தேர்வு
உடுமலை ஒன்றிய தலைவராக பூங் கொடி, செயலாளராக சித்ராதேவி, பொரு ளாளராக சரஸ்வதி, துணை தலைவர்களாக பிரேமலதா, தனலட்சுமி, துணை செய லாளராக சிந்தாமணி, ராஜேஸ்வரி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். அங்கன் வாடி ஊழியர் சங்கத்தின் மாநில பொரு ளாளர் எம்.பாக்கியம், மாவட்ட செயலாளர் எல்லம்மாள், மாவட்ட பொருளாளர் தன லட்சுமி மற்றும் சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் எம். பாலசுப்பிர மணியம், வைரமுத்து, அன்வருல்ஹக் ஆகி யோர் கலத்து கொண்டனர்.