கொரோனா உலகம் முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் ,இந்தியாவின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் என்பது கடந்த 9 வாரங்களில் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 9.1% ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆகஸ்ட் 9-வுடன் முடிவடைந்த மாதத்தில் 8.67% இருந்துள்ளது. இதே கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதமும் புதிய உச்சத்தினை தொட்டுள்ளது. இதே ஜூன் 14-வுடன் முடிவடைந்த காலத்தில் 11.6% ஆக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதத்தில் வேலையின்மை விகிதமானது 7.43% ஆக அதிகமாக இருந்தது. இதே ஆகஸ்ட் 9-வுடன் முடிவடைந்த வாரத்தில் கிராமப்புற வேலையின்மை விகிதமானது 8.37% இருந்துள்ளது. இதே ஆகஸ்ட் 16 வாரத்தில் 8.86% ஆக உயர்ந்தது. விவசாய நடவடிக்கைகள் மற்றும் தற்காலிக பிரச்சனை காரணமாகவும், வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.
இந்திய பொருளாதார கண்காணிக்கும் மையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஜூலை 12-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6.34 சதவீதமாக சரிந்தது, ஆனால் அது மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 17.92 சதவீதமாக இருந்தது, மேலும் ஜூலை 19-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 7.10% ஆகவும், அடுத்த வாரத்தில் 7.66% ஆகவும் மாறியது.
வேலையின்மையானது ஆகஸ்ட் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இது 7.19% ஆக இருந்தது. ஆனால் அதன் பின்னர் ஆகஸ்ட் 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இது மீண்டும் 8.67 சதவீதமாகவும், ஆகஸ்ட் 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.1 சதவீதமாகவும் மீண்டும் அதிகரித்துள்ளது என சிஎம்ஐஇ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.