states

img

வேலையின்மை விகிதம் கேரளத்தில் குறைவு...

திருவனந்தபுரம்:
பாஜக மற்றும் காங்கிரசால் ஆளப்படும் மாநிலங்களை விட வேலைவாய்ப்பு விகிதத்தில் கேரளா சிறந்த நிலையை அடைந்துள்ளது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (சிஎம்ஐஇ) ஒப்பீட்டு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் செய்தி வெளியாகி உள்ளது. 

2021 ஜனவரியில் நாட்டில் வேலையின்மை விகிதம் மைனஸ் 6.5 சதவிகிதமாக இருந்த நிலையில், கேரளத்தில் 5.5 சதவிகிதமாகவும் இருந்தது. கோவிட் ஊரடங்கின்போது, நாட்டில் வேலையின்மை விகிதம் 20 சதவிகிதத்திற்கு மேல் இருந்த நிலையில், கேரளாவில் அது 17 சதவிகிதமாக இருந்தது. இருப்பினும், கடந்த ஐந்து மாதங்களாக அதிக வேலைகள் உருவாக்கப்பட்டு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதால், கேரளாவில் இந்த விகிதங்கள் வெகுவான குறைந்து வருகின்றன. கேரளத்தில் எல்டிஎப் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, வேலையின்மை விகிதம் 12 சதவிகிதமாக இருந்தது. அந்த நேரத்தில் தேசிய சராசரி விகிதம் ஒன்பதாக இருந்தது. ஆனால், தற்போது எல்டிஎப் அரசு
அதனை நான்கரை ஆண்டுகளில் பாதியாக குறைத்துள்ளது. இது இயற்கை பேரழிவுகள், தொற்றுநோய்கள், ரூபாய் நோட்டுகள் மீதான தடை மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றின் மத்தியில் நடந்துள்ளது.