வாணியம்பாடி:
தொடர்ந்து அரசியலில் ஈடுபடப் போவதாக சசிகலா தெரிவித்துள்ளார். பெங்களூரு சிறையி லிருந்து விடுதலையான நிலையில், திங்களன்று அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னைக்கு வந்தசசிகலா திருப்பத்தூர் மாவட் டம் வாணியம்பாடியில் வாகனத்தில் இருந்தவாறே செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக மக்களுக்கு நான்என்றும் அடிமை; அடக்கு முறைக்கு பணியமாட்டேன்; தொடர்ந்து அரசியலில் தீவிரமாக ஈடுபடுவேன்; ஆட்சியைக் கைப்பற்றுவது குறித்துநேரில் சந்தித்து விளக்கமளிப் பேன்” என்று கூறினார். அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு பொருத்திருந்து பாருங்கள் என பதிலளித்தார்.