tamilnadu

img

சசிகலா, தினகரன் மீது டிஜிபியிடம் அதிமுக புகார்...

சென்னை:
தமிழகத்தின் அமைதியை குலைப்பதற்காக சசிகலா, தினகரன் சதித் திட்டம் தீட்டுவதாகவும் அவர்கள் தமிழகத்தில் கலவரத்தை தூண்டுவதாகவும் கூறி அதிமுக மூத்த அமைச்சர்கள் தமிழக காவல்துறை தலைவரிடம் மனு கொடுத்துள்ளனர்.

கடந்த வாரம் சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து சசிகலா  விடுதலையானார்.அவரது காரில்அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது சர்ச்சையாக மாறியது. அதிமுககொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என்றும் தமிழகத்தில்கலவரத்தை தூண்டும் வகையில் சசிகலா, தினகரன் செயல்படுகின்றனர் என்றும் கூறி டிஜிபியிடம் இரண்டாவது முறையாக புகார் கொடுத்துள்ளனர்.டிஜிபியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தஅமைச்சர்கள் குழுவில் அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயக்குமார்,தங்கமணி உள்ளிட்டோர் இருந்தனர்.இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், “அமைச்சர்கள் ஓரிரண்டு பேர் ஏன் இந்த அளவுக்கு பதற்றம் அடைகிறார்கள் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.தாம் பேசியதை திரித்து அமைச்சர்கள் உண்மைக்கு புறம்பாகப் பேசி வருவதாகவும், இவர்களே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எதையாவதுசெய்துவிட்டு ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் மீது பழிபோட சதி செய்கிறார்களோ என்றும் சந்தேகம் ஏற்படுவதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.அதிமுக மீதான உரிமை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை வசதியாக மறைத்துவிட்டு இவர்கள் பேசுகிறார்கள் என்றும் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.