tamilnadu

img

வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறைந்த அளவே மழை பெய்ததால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரியத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாய நிலங்களில் இருக்கும் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கோடை காலம் தொடங்கும் முன்னரே நீர்மட்டம் சரிய தொடங்கியதால், அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


இந்நிலையில், வேலூர் அடுத்துள்ள சிவநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பலர் விவசாயத்தை கைவிட்டுள்ளனர். ஒரு சில விவசாயிகள் டிராக்டர் டேங்கர்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் டிராக்டர் டேங்கர் தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.