tamilnadu

வேலூர் மற்றும் தி,மலை முக்கிய செய்திகள்

வேலைவாய்ப்பு முகாம்

வேலூர், நவ. 10- வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தனியார்துறை துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட  செய்திக் குறிப்பு வருமாறு:- மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்புத் துறை, மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நவம்பர் 16 ஆம் தேதி ஜோலார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்த உள்ளன.  இம்முகாமில் 100 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான தகுதியுடைய நபர்களைத் தேர்வு செய்ய உள்ளன.  இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் தொழில்பயிற்சி, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு வரையிலான கல்வித் தகுதி உடையவர்கள்கள் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

தண்ணீரில் மூழ்கி சிறுவர்கள் பலி

தி,மலை,நவ.10- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அதியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மணி கண்டன்- ஜோதி தம்பதியின் மகன் நித்திரன் (2).  இவன் வெள்ளிக்கிழமை வீட்டின் பின்புறம் திறந்த வெளி விவசாய கிணற்றின் அருகே விளையாடச் சென்று ள்ளான். அப்போது, அதில் தவறி விழுந்துள்ளான்.  சிறுவனை காணாமல் பெற்றோர்கள் பல இடங்க ளில் தேடியும் கிடைக்க வில்லை. பின்னர் சிறுவனின் சடலம் கிணற்றில் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.   இது குறித்து தகவலறிந்த கீழ்கொடுங்கலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நித்திரன் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், வந்தவாசி அடுத்த சாலமேடு கிரா மத்தைச் சேர்ந்தவர் மகேந்தி ரன் மகன் விஷ்வா (12). இவர் அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.  வழக்கம் போல் வெள்ளிக்கிழமை பள்ளி க்குச் சென்ற விஷ்வா, மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளிக்கு அருகே உள்ள குளத்திற்கு சென்றுள்ளார்.   அப்போது கால் தவறி குளத்தில் விழுந்துள்ளார். இதை க்கண்ட மற்ற மாணவர்கள் அக்கம்பக்கத்தினரை அழைத்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், கிணற்றில் மயங்கிய நிலை யில் கிடந்த விஷ்வாவை மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரி வித்தனர்.