tamilnadu

உயர்கல்விக்கான நிதியுதவி: விஐடியில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூர், மே 6-அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை மூலம் உயர்கல்விக்கான நிதியுதவி பெற விரும்பும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளையின் கீழ் வேலூர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ள பொருளாதாரத் தில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பங் கள் அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை, அறை எண்: 215, டாக்டர் எம்ஜிஆர் பிளாக், விஐடி வளாகம், வேலூர், அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி திருமண மண்டபம், வாலாஜாபேட்டை அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி.ஆற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, கணியம் பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், குடியாத்தம் நகராட்சி அலுவலகம், ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி இஸ்லாமியர் ஆண் கள் கல்லூரி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஜவ்வாதுமலை விஐடி கிராம வள மையம், வனத் துறை மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் விண்ணப் பங்கள் வழங்கப்படும்.விண்ணப்பங்களை வரும் 14 ஆம் தேதி வரை வேலை நாள்களில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை உரிய சான்றுகளுடன் அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தகுதியுடைய மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில நிதியுதவி வழங்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.