தருமபுரி, ஏப்.17- பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதுகுறித்து கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, பென்னாகரம் அருகே மாமரத்துப்பள்ளம் பகுதியில் உள்ள பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019 - 2020 ஆண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கல்லூரியில் விநியோகிக்கப்படுகின்றன. இளங்கலை பி.ஏ. (தமிழ்), பி.ஏ. (ஆங்கிலம்), பி.எஸ்சி (கணிதம்), பி.எஸ்.சி(கணினி அறிவியல்) மற்றும் பி.காம் போன்ற பாடப் பிரிவுகளுக்கான விண்ணப்ப படிவங்களை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் அசல் சாதிச் சான்றிதழை காண்பித்தும், விண்ணப்பக் கட்டணம் ரூ.50 செலுத்தியும் பெற்றுக்கொள்ளலாம் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.