tamilnadu

img

உள்ளாட்சியில் வேலைவாய்ப்பு தருக!

மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

c, செப்.16- உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திற னாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சட்டத்தை மாநிலக் குழு கூட்டம் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில், தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திற னாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். அனைத்து வகை மருத்துவமனைகளிலும் வலிப்பு நோய்  மற்றும் மனநிலை மருந்துகள் கிடைக்கச் செய்ய வேண்டும். ஊத்தங்கரையில் நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 58 பேர் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். அரசு அலுவலகங்களில் மாற்றுத்திற னாளிகள் சென்று வர ஏதுவாக சாய்வு தளம் அமைக்க வேண்டும். ஒகேனக்கல் வரும் மாற்றுத்திறனாளிக்கு போதிய வசதிகளை செய்து தரவேண்டும் மற்றும் பரிசல் பயணம் செய்ய இலவச அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.