tamilnadu

img

மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

வேலூர்,செப்.28 - வேலூர் மாவட்டம், வாலாஜா நகராட்சியில் குப்பைகளை தினசரி அகற்ற வேண்டும், கழிவுநீர் கால்வாய் களை தூர்வார வேண்டும், குடிநீரில் கழிவு நீர் கலப்பதை நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர்கள் ஆ.ரேணு, ஆர்.காளப்பன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் தா.வெங்கடேசன், எல்.சி.மணி, மணிகண்டன், முனிரத்தினம், டி.பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராணிப்பேட்டை வள்ள லார் நகர மக்களின் கோரிக்கைகளை வலியு றுத்தி நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு ஆர்.கீதா, கே.ஆண்டாள் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எல்.சி.மணி, தா.வெங்கடேசன், தாலுக்கா செயலாளர் என்.ரமேஷ், வாலிபர் சங்க தாலுக்காச் செயலாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். வாணியம்பாடியில் கிராம நிர்வாகம் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  சி.முத்து தலைமை தாங்கினார்.  மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் வ.அருள்சீனிவாசன், ஆர்.வி. குமார் ராமசந்திரன் ராஜா ஆகியோர் பேசினர். காட்டு வெங்கடாபுரம் முதல் சென்னாம்பாறை காலனி வரை தார்சாலை அமைக்க வேண்டும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை விரிவு படுத்தி தண்ணீர் வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறு த்தப்பட்டன.