லக்னோ, ஏப். 12 -2014 மக்களவைத் தேர்தலின்போது,காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு எதிராகபோட்டியிட்டு தோற்றவர் ஸ்மிருதி இரானி. ஆனாலும் மோடிக்கு நெருக்கமானவர் என்பதால், மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டு, மத்திய அமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. அதேநேரம், ஸ்மிருதி இரானி தாக்கல் செய்த 2014-ஆம் ஆண்டு வேட்புமனுவில், அவர் தில்லி பல்கலைக்கழகத்தில் 1994-இல் பி.காம். முதல் பாகம் படித்தேன் என்று கூறியிருந்தது சர்ச்சையானது. ஏனெனில், இதற்கு முன்பு 2004-ஆம் ஆண்டு தில்லி சாந்தினி சவுக் தேர்தலில் போட்டியிடும் போது, தன்னை பி.ஏ.பட்டதாரி என்று ஸ்மிருதி இரானி கூறியிருந்தார். ஆகவே, ஸ்மிருதி இரானி,பி.காம். பட்டதாரியா, பி.ஏ. பட்டதாரியா?என்று கேள்விகள் எழுந்தன.கல்வித் தகுதி தொடர்பாக, வேட்புமனுவில் அமைச்சர் ஸ்மிருதி இரானி,பொய்யான தகவல்களை அளித்திருக்கிறார் என்று, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தஅகமது கான் என்பவர், தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். ஆனால், ஸ்மிருதி இரானியை துன்புறுத்தும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக கூறி, அந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.இந்நிலையில், அமேதி தொகுதியில்மீண்டும் ராகுல் காந்தியை எதிர்த்துகளமிறங்கியிருக்கும் ஸ்மிருதி இரானி, அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த மனுவிலாவது, அவர் பி.காம். பட்டதாரியா, பி.ஏ. பட்டதாரியா? என்பதற்கு விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், திடீர்திருப்பமாக தானொரு பட்டதாரியே அல்ல, பன்னிரண்டாம் வகுப்பு வரையேபடித்துள்ளேன் என்று ஸ்மிருதிஇரானியே ஒப்புக் கொண்டுள்ளார்.இவ்வளவு காலமும் எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டு உண்மைதான்என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.1991-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பும்,1993-இல் பன்னிரண்டாம் வகுப்பும் முடித்ததாக கூறியிருக்கும் ஸ்மிருதி இரானி, 1996-ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியாகபி.காம். படிக்க விண்ணப்பித்ததாகவும், எனினும் 3 வருட டிகிரியை முடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.