புதுதில்லி:
ஜவுளித்துறையினர் அவர்களுக்கு வேண்டியதை அவர்களாகவே பார்த்துக் கொள்ள வேண்டும்; மத்திய அரசிடமிருந்து எந்த நிதியையும் எதிர்பார்க்கக் கூடாது என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.“சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி” அமைப்பினருடன், ஸ்மிருதி இரானி கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
அப்போது, கொரோனா முடக்கத்தையொட்டிய நிதிப்பற்றாக் குறையைச் சமாளிக்க, 25 சதவிகிதநடைமுறை மூலதனக் கடனைவழங்க வேண்டும். வங்கிக் கடன் களுக்கான மாதத்தவணையை அடுத்த ஒரு வருட காலத்துக்குத் தள்ளிவைக்க வேண்டும். ஒரு வருட தள்ளிவைப்புக்குப்பின், வங் கிக்கடன்களைச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அளவுள்ள டேர்ம் லோன் கொடுக்க வேண்டும்; ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் குறைக்கவேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தொழில்-வர்த்தக அமைப்பினர் முன்வைத் துள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும்போதுதான், ``கொரோனா தொற்றுப்பரவலைத் தடுப்பதற்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழலில், அரசிடமிருந்து நிதியுதவியை எதிர்பார்த்து நிற்காமல், ஜவுளித்துறையின் தேவைகளை நீங்களாகவே ஒருங்கிணைந்து செயல்பட்டு நிறைவேற் றிக் கொள்ள வேண்டும்” என்று முகத் தில் அடித்தாற்போல் கூறியுள்ளார்.“அரசின் வேலையென்பது, கொள்கைகளை வகுப்பதும் தேவைப்படும்போது தொழிலுக்கு ஆதரவு வழங்குவதும் மட்டுமே” என்று உபதேசமும் செய்துள்ளார்.