லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்ட மேலவை உறுப்பினராக இருப்பவர் புக்கல் நவாப். சமாஜ்வாதி கட்சியில் இருந்த இவர், கடந்த ஆண்டு பாஜக-வில் இணைந்தார். சேர்ந்த இடத்திற்கு ஏற்ப, தன்னை மாற்றிக்கொண்டு, ‘அனுமன் பக்தர்’ என்று அறிவித்த புக்கல் நவாப், கடந்த ஓராண்டாகவே அனுமன் விழாக்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமையன்று ‘ரக்ஷா பந்தன்’கொண்டாடப்படவுள்ள நிலையில் பசுவுக்கு ராக்கி கயிறுகட்டப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.“சகோதரத்துவத்தை உணர்த்துவதற்காக பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டுவது வழக்கம். ஆனால்பசுவுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பும் புனிதமானது.சகோதரத்துவம் போன்றது. எனவே அனைவரிடமும் இந்தகருத்தை கொண்டு செல்லும் வகையில் ரக்ஷா பந்தன் தினத்தில் பசுக்களுக்கு ராக்கி கட்டப்போகிறேன். இதற்காக லக்னோவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.முஸ்லிம் மதத்தைத் சேர்ந்தவரான இவர், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்றும் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.