சட்டத்திற்கு புறம்பாக உயிர் மருத்துவ கழிவுகளை கையாளும் பொதுக்கூடத்தை நடத்தி வருவது தொடர்பாக உத்தரப்பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரெய்லி நகரத்தில் நோயாளிகளின் உடலில் பயன்படுத்தப்படும் மருத்துவ கழிவுகளை கையாளும் பொதுக்கூடம்(CBMWTP) ஒன்று அரசு அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்பட்டு வருகிறது. இன்று இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் மருத்துவக்கழிவு கூடத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யக்கோரி உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜனவரி30 தேதி நடந்த விசாரணையில் முறையான அனுமதியின்றி மருத்துவக் கழிவுகளை கையாளும் பொதுக்கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரப்பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தது. தற்போது உத்தரப்பிரதேச மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.