tamilnadu

img

மாயாவதி காலில் விழுந்த அகிலேஷ் மனைவி

லக்னோ:

உத்தரப்பிரதேசத்தின் இருபெரும் துருவங்களாக இருந்த, சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி சேர்ந்துள்ளன. பாஜக-வை தோற்கடித்தாக வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு இக்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. அதுமட்டுமன்றி, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இருவரும் ஒரேமேடையில் ஒன்றாக தேர்தல் பிரச்சாரம் செய்து, பலரையும் வியப்பில் ஆழ்த்தினர். இந்த கூட்டத்தில் பேசிய முலாயம் சிங், தனது கட்சியினர் மாயாவதிக்கு மிகுந்த மரியாதை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், கன்னோஜ் தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த மாயாவதியிடம், முலாயம் சிங்கின் மருமகளும், அகிலேஷின் மனைவியுமான டிம்பிள், மிகுந்த பணிவுடன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது, பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து டிம்பிளை ஆதரித்துப் பேசிய மாயாவதி, அகிலேஷ் தனது குடும்பத்தின் இளைய சகோதரன் என்றும், டிம்பிள் தனது மருமகள் என்றும் அன்பை பொழிந்துள்ளார்.