லக்னோ, ஏப். 5 -
முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித்தலைவருமான அஜீத் சிங், உத்தரப்பிரதேசத்தில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறார். இதையொட்டி, பாக்பத் நகர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அஜீத் சிங், பாஜக கட்சியையும், பிரதமர் மோடியும் கடுமையாக விமர் சித்துள்ளார்.“பிரதமர் மோடி தான் எப்போதும் பொய்யே பேசுவதில்லை என்று கூறி வருகிறார். ஆனால் இன்றுவரை அவர் உண்மையே பேசியதில்லை என்பதுதான் உண்மை” என்று கூறியிருக்கும் அஜீத் சிங், “பொய் சொல்லக் கூடாது என்று கூறித்தான் பெரியவர்கள் தங்கள் குழந்தைகளைவளர்ப்பார்கள். ஆனால், மோடியைப் பெற்றவர்கள் அவ்வாறு சொல்லி வளர்க்கவில்லை போலிருக்கிறது” என்றும் விமர்சித் துள்ளார். அதேபோல, ‘பெண்களின் உரிமையை நிலை நிறுத்தவே முத்தலாக் விஷயத்தில் பரிந்து பேசுகிறேன்’ என்று மோடி கூறிக்கொள்வதாகவும், ஆனால், ‘மூன்று முறை அல்ல, ஒரு முறைகூட தலாக் சொல்லாமல் தன் மனைவியை நட்டாற்றில் விட்டவர்தான் நமது பிரதமர் மோடி’ என்றும் அஜீத் சிங் சாடியுள்ளார்.