tamilnadu

img

டெக்சாமெத்தசோன் அதிகளவில் உற்பத்தி செய்ய உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை

ஜெனீவா, ஜூன் 23- கொரோனா வைரசை தடுக்க முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. அதற்கான தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிகள் ஆறு மாதங்களாக நடபெற்று வருகின்றன. ஆனால், கொரோனாவை முற்றிலும் குணமாக்கும் அதிகாரப்பூர்வ மருந்து இதுவரை கண்டறி யப்படவில்லை. இந்நிலையில், மூட்டுவலி, கடுமை யான ஒவ்வாமை, ஆஸ்துமா,  சிலவகையான புற்று நோய்களுக்கு பயன்படுத்தப்படும் டெக்சாமெத்த சோன் மருந்து, தீவிர பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளின் இறப்பை குறைப்பதாக கண்டறி யப்பட்டுள்ளதாக  லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து டெக்சாமெத்தசோன் மருந்தை தீவிர கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் அதிக அளவில் தயாரிக்குமாறு சர்வதேச நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.மருத்துவக் கண்காணிப்பில் உள்ள தீவிர நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்து பலனளிக்கும் என்று கூறப்படுகிறது.