உக்ரைன் நாட்டில் கல்லூரியில் தீ ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 பேர் உயரிழந்த சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் ஒடிசா நகரத்தில் உள்ள கல்லூரி ஒன்றின் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 16 பேர் பலியாகி உள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கல்லூரி கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.