tamilnadu

img

கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ. 27 லட்சம் ஒதுக்கீடு

உதகை, ஜூலை 28- பந்தலூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டப் பட்டது . நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே  உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எல்கேஜி முதல்  எட்டாம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இருப்பினும், பள்ளியில் போதிய வகுப்ப றைகள் இல்லாமல் பற்றாக்குறை நிலவி வந்தது. இதனைத்தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், புதிய வகுப்ப றைகள் கட்ட அரசு சார்பில் ரூ.27 லட்சம் ஒதுக்கப்பட்டுள் ளது.

இந்நிலையில், புதிய கட்டிடம் கட்டுவதற்கான  அடிக்கல் நாட்டு விழா திங்களன்று நடைபெற்றது.