உதகை, செப். 2 - கூடலூர் அருகே சேரும், சகதியுமாக உள்ள சாலையை, தார் சாலையாக மாற்றி அமைக்க அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், சேரங்கோடு ஊராட்சிக்கு உட் பட்ட மண்ணாத்திவயல், விளக்கலாடி, கை யுன்னி ஆகிய கிராமங்கள் உள்ளது.
இங்கு 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இக்கிராமங் களுக்கு செல்வதற்கு பாதை ஒன்று உள்ளது. மேலும், இப்பாதை வெண்டணா, கர்க்கப் புரா, சூரத், பணியர் காலனி ஆகிய கிராமங் களையும், கூடலூர், கள்ளிக்கோட்டை, சுல் தான் பத்தேரி ஆகிய மாநில சாலையையும் இணைக்கும் பாதை ஆகும். இந்த பாதை கடந்த பல ஆண்டுகளாக மிக மோசமாக பாதிப்படைந்து உள்ளது. மேலும் மழைக் காலங்களில் சேரும், சகதியுமாக மாறி விடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்
. இதன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்படும் நோயாளிகளை உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்ல முடிவதில்லை. எனவே, இந்த பாதையை தார் சாலையாக மாற்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.