தூத்துக்குடி:
சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியில் அபூர்வமாக ஒரே குழியில்16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும், கொற்கையில் முதல் கட்ட அகழாய்வு பணியும் துவங்கியது. இந்த பணியானது தொடர்ந்து 4 மாத காலமாக நடைபெற்று வருகிறது. சிவகளை அகழாய்வு பணி அகழாய்வு இயக்குநர்பிரபாகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு பணிக்காக 15க்கும்மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டு 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவகளை அகழாய்வு பணியை பொறுத்தவரை 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தநிலையில் சிவகளை பரம்பு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முது மக்கள் தாழிகளில் 5 முதுமக்கள் தாழிகள் மூடியுடன் உள்ளது. 10 முதுமக்கள் தாழிகள் பெரியஅளவில் பிரம்மாண்டமாக உள்ளது. ஒவ்வொரு முதுமக்கள் தாழியும் 2 அடி முதல்4 அடி வரை உயரமாக காணப்படுகிறது. இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ள னர். மேலும் பானைகளும், பானை ஓடுகளும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. சிவகளை அகழாய்வு பணியில் தாமிரபரணிக்கரை நாகரீகத்தை கண்டறிவதற்காக முதல் முறையாக வாழ்விடப்பகுதி களையும் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அகழாய்வு அதிகாரிகளும், ஆர்வலர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.