tamilnadu

img

காவலர் சுப்பிரமணியன் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி

தூத்துக்குடி:
ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தூத்துக்குடிமாவட்ட காவலர் சுப்பிரமணியன் கடந்த 18.08.2020 அன்று மணக்கரைஅருகே ரவுடியை கைது செய்யச் சென்றபோது நாட்டு வெடி குண்டுவீசப்பட்டதில் வீர மரணமடைந்துள்ளார். அவருக்கு வியாழனன்று (20.8.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும்  மவுன அஞ்சலி செலுத்தி, அவருடைய புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலிசெலுத்தினர்.