தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே தைலாபுரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை 15 ஆண்டுக்கு முன்பு நத்தம் குடியிருப்பு பட்டாவாக வழங்கியுள்ள நிலையில்அதில் யாரும் வீடுகள் கட்டவில்லை. இதனையடுத்து அந்த பட்டா செல்லாத நிலைஏற்பட்து.இந்நிலையில் தைலாபுரத்தைச் சேர்ந்ததனராஜ் மனைவி சுகந்தி (38), இவரது மகன் கவுதம் (13), அந்தோணி செல்வன் மனைவி உபகார செல்வி (40), பிரபாகரன் மனைவி ஏஞ்சலின் (30) ஆகியோர் நத்தம்குடியிருப்பு பகுதி காலியிடத்தில் கம்பிவேலிகள் போட்டு குடிசைகள் அமைத்துள்ளனர். தற்போது அந்நிலம் அரசுக்கு சொந்தமானது எனக் கூறி வருவாய்த் துறையினர் ஜேசிபி மூலம் குடிசைகளை அகற்றினர்.இந்நிலையில் அவர்கள் 5 பேரும் தைலாபுரத்தில் சுமார் 50 அடி உயரள குடிநீர் தொட்டிமீதேறி குடியிருப்புக்கு பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் கீழே இறங்கினர்.