tamilnadu

img

பெண்கள் மேம்பாட்டு நிகழ்ச்சி

மண்ணச்சநல்லூர், ஜூன் 27- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பெண்கள் மேம் பாட்டிற்கான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மண்டல மேலாளர் கமலஹாசன் தலைமை வகித்தார். சமயபுரம் கிளை மேலாளர் விவேக் வரவேற்றார். பயிற்சி துறை உறுப்பினர் சிவா முன்னிலை வகித்தார். குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன் முறைக்கு எதிரான கூட்டமைப்பின் மண்டல ஒருங்கி ணைப்பாளர் பிரபு, அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் மகேந்திரவர்மன் பேசினர்.  ஸ்ரீரங்கம் பகுதி மேலாளர் சுரேஸ்பாபு, சக்திவேல், சமய புரம் மைய தலைவி பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். சமயபுரம் கிளை உதவி மேலாளர் தேன்மொழி நன்றி கூறினார். திட்ட மேலாளர் சந்துரு பயிற்சி ஏற்பாடு களை செய்தார். மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்க ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.