தரங்கம்பாடி, ஏப்.3- நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் தமுஎகச சார்பில் மகளிர் தின தேடல் அமர்வு சங்கத்தின் கிளைத் தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. ஏவிசி கல்லூரியின் தமிழ்துறை உதவி பேராசிரியர் முனைவர் மஞ்சுளா, பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த லீலாவதி, மாதர்சங்க மாநில துணைத்தலைவர் கலைச்செல்வி, தமுஎகசமாவட்டச் செயலாளர் பாலசுந்தரம், கிளை துணைத்தலைவர் கலா, கிளை துணைச் செயலாளர் சசிகலா ஆகியோர் உரையாற்றினர். பல்வேறு தளங்களில் சாதித்த சாதனையாளர்களை கவுரவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.