திருத்துறைப்பூண்டி மக்கள் எதிர்பார்ப்பு
திருத்துறைப்பூண்டி, ஆக.21- திருத்துறைப்பூண்டி நகராட்சி நான்கு வழித் தடங்களை கொண்டுள்ளது. இதில் வணிக நிறு வனங்கள், பள்ளி- கல்லூரிகள், ஆலயங்கள், அரசு நிறுவனங்கள் என முக்கியமான பகுதியாகவும், லட்சகனக்கான மக்களை கொண்ட நகரம். சாலை களோ, வணிக நிறுவனங்கள் வாகனம் நிறுத்துவ தற்கான எவ்வித வசதியும் இல்லாமல் தான் பல கட்டி டங்கள் உள்ளன். அதுமட்டுமின்ற சாலைகளிலும் ஆக்கிரமிக்கப் பட்டு போக்குவரத்துக்கும், மக்கள் நடமாட்டத்திற்கு இடையூறாகவும் உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை நெடுஞ்சாலைதுறை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளான கடைகளை அகற்றி னாலும் மீண்டும் ஓரிரு நாட்களில் சாலைகளை ஆக்கி ரமித்து விடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் திருத் துறைப்பூண்டியில் தொடர்கதையாகவே உள்ளது. இது ஒருபுறமிருக்க காய்கறிகள் மற்றும் கன ரக பொருட்களை இறக்கும் லாரிகள் காலை 8 மணி யிலிருந்து இரவு வரை நேரம் தங்களுக்கு தேவை யான போது ஒருவழிப்பாதையை மறைத்து பொருட் கள் இறக்குகின்றனர். இதனால் பள்ளி மற்றும் அரசு அலுவலர்கள் காலத்தோடு அலுவலகங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த சாலையில் காய்கறிகள் மற்றும் பொருட் களை இறக்கக்கூடிய கனரக வாகனங்கள் அதிகாலை யில் இறக்கினால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். இதனை கண்டும் காணாமல் போக்கு வரத்து காவலர்கள் இருக்கின்றனர். ஆகவே ஒருவழி சாலையை விதிமீறும் கனரக மற்றும் சரக்கு வாகனங்க ளுக்கும், ஓட்டுனர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும். அதிகாலையில் பொருட்கள் இறக்குவதற்கும் மற்றும் சுத்தம் செய்வதற்கும் நகராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். அரசு விதிகளை பின் பற்றாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி உரி மையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி இதுபோன்ற கட்டிடங்களுக்கு அனு மதி அளிக்கக்கூடிய நகராட்சி நிர்வாக அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இரயில் சேவை துவங்க இருப்பதால் கூட்ட நெரிசல் என்பது அதிகமாகும் நிலை ஏற்படும். ஆகவே இரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும். கெரோனா காலம் என்பதால் தொற்று பர வும் அபாயம் உள்ளது. இக்கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பில் திருத் துறைப்பூண்டி மக்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் உள்ளனர்.
- ஏ.கே.வேலவன்