திருச்சிராப்பள்ளி, மே 30- கொரோனாவால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு தேவை கடனுதவி அல்ல, நிவாரணத் தொகை தான் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு கூறினார். ஸ்ரீரங்கத்தில் செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது: கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடனுதவி முக்கி யமல்ல. அவர்களுக்கு நிவார ணத் தொகை மட்டுமே முக்கி யம். எனவே, மத்திய அரசு சார்பாக ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ.10000, மாநில அரசு சார்பில் ரூ.7500 வழங்க வேண்டும். அது தான் இப்போது தற்காலிக தீர்வா கும். நேரு செய்த சாதனைக ளையும், காமராஜர் செய்த சாதனைகள் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் 6 ஆண்டுகளாக மோடி பிரதமராக இருந்த போது செய்த சாதனைகள் என்று எதுவுமே இல்லை.
பணமதிப்பிழப்பு மக்கள் அவதிப்பட்டது தான் அவர் ஆட்சியில் கண்ட பலன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய விசாரணையை விரைவில் முடித்து அவர் இயற்கை மரணம் அடைந் தாரா, கொலை செய்யப் பட்டாரா என்ன நடந்தது என்பதை உடனடியாக வெளி யிட வேண்டும். அத்துடன் ஜெயலலிதாவிற்கு தமிழகம் முழுக்க உள்ள சொத்து எவ்வளவு என்பது குறித்து தனியாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசா ரணை கமிஷன் அமைத்து விவரத்தை வெளியிட வேண்டும். ஜெயலலிதா சினிமா மூலம் வந்த வரு மானத்தை வாரிசுதாரர்க ளுக்கும் மற்றும் அவர் ஆட்சி யின் போது தவறான வழி களில் சம்பாதித்த பணத்தை நாட்டுடமையாக்க வேண்டும் என திருநாவுக்கரசு எம்.பி., கூறினார்.