மன்னார்குடி, ஏப்.11-மன்னார்குடி ராஜகோபாலசாமி பங்குனி விழாவில் செவ்வாயன்று வெண்ணைத்தாழி. சுமார் ஒரு லட்சம்பேர் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து மன்னார்குடிக்கு வந்திருந்தனர். பந்தலடி கீழராஜ வீதியில் அலைமோதிய மக்களுக்கு மன்னார்குடி சாகர் சில்க்ஸ் நிறுவனத்தார் உணவு பொட்டலங்கள், நீர்மோர் பானகம், கேசரி, கடலைவிநியோகம் செய்தனர். சாகர் நிறுவனத்தில் பணிபுரியும் இஸ்லாம் மார்க்கத்தினர் தலையில் தொப்பி அணிந்தவாறு விழாவிற்கு வந்த மக்களுக்கு நீர்மோரையும், பானகத்தையும் வழங்கினர். நிறுவனத்தின் இந்துப் பெண்கள் பட்டுச் சேலை அணிந்தவாறும், இன்முகத்தோடும் மக்களுக்கு உணவு பொட்டலங்களையும் விநியோகம் செய்தனர். இந்த விழா வேற்றுமையில் ஒற்றுமையும் மக்களிடையே நல்லிணக்கமும் என்றுமே மகிழ்ச்சி தானே.