திருச்சிராப்பள்ளி, ஜூலை 9- திருச்சி மாநகரை ஸ்மார்ட் சிட்டி ஆக்கும் வகையில் சாலையோர கடைகள், தள்ளுவண்டிகள் ஆகிய வற்றை ஆக்கிரமிப்பு என கருதி அவற்றை அகற்றும் பணியில் மாநக ராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகின்ற னர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். இந்நிலையில் பெரும் வணி கர்கள் என்.எஸ்.பி.ரோடு போன்ற பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணை யரிடம் மனு கொடுத்துள்ளனர். இதையடுத்து நீண்டகாலமாக ஒரே இடத்தில் வியாபாரம் செய்து வரும் தரைக்கடை வியாபாரிகளை அப்புறப்படுத்த கூடாது.
மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தரைக்கடை வியாபாரிகளுக்கு அடை யாள அட்டை வழங்க வேண்டும். விற்பனைக்குழு அமைக்க வேண் டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தரைக்கடை வியாபாரிகள் சங்க (சிஐடியு) மாவட்டச் செயலாளர் செல்வி தலைமையில் தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் திங்க ளன்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். இதனையடுத்து மாநகராட்சி அலுவலகத்திற்குள் யாரும் செல்ல முடியாதபடி கதவுகளை பூட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. இதனால் மாநகராட்சி அலு வலகம் முன் வியாபாரிகள் திரண்டு கோஷமிட்டனர். பின்னர் மாநக ராட்சி நகர பொறியாளர் அமுத வள்ளி சங்க நிர்வாகிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். பேச்சு வார்த்தையில் தரைக்கடை வியா பாரிகள் சங்க(சிஐடியு) மாவட்ட தலைவர் கணேசன், பொருளாளர் மணிகண்டன், சிஐடியு மாவட்ட தலைவர் ராமர், மாவட்டக்குழு உறுப்பினர் வீரமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெய பால், சம்பத், வெற்றிச்செல்வன், மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறையினர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் மாநக ராட்சியில் சாலையோரத்தில் பல ஆண்டுகளாக தள்ளுவண்டி, தலை சுமை, சைக்கிள், இரண்டு சக்கர தள்ளுவண்டிகளில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றோம்.
பல மாவட் டங்களில் விற்பனைக்குழு அமைத்து முறைப்படுத்தப்பட்டுள் ளது. ஆனால் திருச்சி மாநகராட்சி யில் அதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் உயர்நீதி மன்ற மதுரை கிளை 2 மாதத்திற் குள் அடையாள அட்டை வழங்கி வியாபாரக்குழு அமைத்து நட வடிக்கை எடுக்க தீர்ப்பு வழங்கி உள்ளது. அதனை உடனே அமல் படுத்த வேண்டும் என்றனர். இதையடுத்து போலீசார், வியா பாரிகள் மற்றும் மாநகராட்சி அதி காரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக் கப்பட்டு இன்னும் 1 மாதத்தில் தரைக் கடை, தள்ளுவண்டி கடை வியாபாரிகளுக்கான விற்பனை இடத்தை அக்குழு தேர்வு செய்யும். அதுவரை தரைக்கடை வியாபாரி களுக்கு தொந்தரவு இருக்காது என மாநகராட்சி சார்பில் உத்தர வாதம் அளிக்கப்பட்டது. இதை யடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.