பொன்னமராவதி, நவ.17- புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், வார்ப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் “மரமும் மனிதனும்” அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு வார்ப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மலைச்சாமி தலைமை வகித்தார். “மரமும் மனிதனும்” அமைப்பின் நிறு வனரும், மாங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரி யருமான முகமது ஆஸிம் வரவேற்றார். கஜா புயல் நினைவு தினத்தையொட்டி கஜா புயலால் பாதித்த பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்று களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் மரமும் மனி தனும் அமைப்பு சார்பில் கடந்த ஜனவரி மாதம் முதல் வார்ப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 350 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பிச்சங்காளன்பட்டி, தேவன்பட்டி, கொள்ளுப்பட்டி மற்றும் மேட்டாம்பட்டி ஊர்ப் பொதுமக்கள், பணித்தளப் பொறுப்பாளர்கள் முத்து லட்சுமி, பூமலர், கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறி னார்.