சேலம், நவ.20- ஓமலூர் அருகே குடிமராமத்து பணி முடிந்த ஏரிக் கரையில் மரம் நடும் விழா நடைபெற்றது. சேலம் மாவட்டம், மேச்சேரி ஒன்றியத் திற்குட்பட்ட தைலாக்கவுண்டனூர் ஏரி குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரப் பட்டது. இந்த குடிமராமத்து பணிக்கு பின் ஏரிக்கரையோரத்தில் மரம் நடும் விழா நடை பெற்றது. இந்த மரம் நடும் விழாவை மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலினி, உதவி பொறி யாளர் சங்கர் கணேஷ், முன்னாள் பேரூ ராட்சி தலைவர் சந்திரசேகரன், தாய் அறக் கட்டளை உறுப்பினர் நந்தினி, குறிஞ்சி உழவர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.