திருச்சிராப்பள்ளி:
1937 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் எரகாலூரில் பிறந்தவர்ஸ்டான் சுவாமி. இவர் தனதுகல்லூரிப் படிப்பை செயின்ட் ஜோசப் கல்லூரியிலும், மேற்படிப்பை பிலிப்பைன்ஸ்மற்றும் பெல்ஜியம் நாட்டிலும் படித்தார். பெங்களூருவில் இந்திய சமூக கழகம் என்னும் அமைப்பை உருவாக்கி, பல சமூக செயற்பாட்டாளர்களை உருவாக்கினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில்ஆதிவாசி மக்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்காக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிநகரில் ஆதிவாசி மக்கள் ஆராய்ச்சி மையம் என்னும்அமைப்பை உருவாக்கினார்.எவ்வித விசாரணையும் இல் லாமல் சிறையில் வாடிய 3000 ஆதிவாசி இளைஞரின் விடுதலைக்காக ஓயாமல் பாடுபட்டார். இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு பீமா கோரேகான் வழக்கில் உபாசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஸ்டான் சாமிக்கு உரியகாலத்தில் மருத்துவம் மற்றும் ஜாமீன் வழங்கப்படாததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிறையிலேயே மரணமடைந்தார்.
இந்நிலையில் திருச்சி புள்ளம்பாடி எரகாலூரில் உள்ள ஸ்டான் சுவாமி இல்லத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர்,புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், மாவட்டசெயற்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் சம்பத், புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் ரஜினிகாந்த்,ஒன்றியக் குழு உறுப்பினர் கள் அடைக்கலராஜ், தமிழ்ச்செல்வன் ஆகியோர் வெள்ளிக்கிழமை சென்றனர்.அங்கு ஸ்டான் சுவாமி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஸ்டான்சுவாமியின் மூத்த சகோதரர் இருதயசாமி, அவரது மகன், பேரன் பிரிட்டோ பிரபு மற்றும் குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்தனர். ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் ஊர்பொதுமக்கள் உடனிருந்தனர்.