election-2019

img

‘ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை’

கோயம்புத்தூர், ஏப்.3-


கோவை துடியலூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இந்நிலையில் சிறுமியை இழந்த பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க புதனன்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர் கே. பாலகிருஷ் ணன், கோவை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, மாதர் சங்க மாநில துணை தலைவர் என்.அமிர்தம், மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதனையடுத்து கே.பால கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறு கையில், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்திருப்பது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த நிலையில், இங்கு சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். கோவையில் கடந்த ஆறு மாதமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகமும், அரசுஅதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங் களுக்கு, தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் விற்பனை அதிகமாக இருப்பது பிரதான காரணமாக உள்ளது. காவல்துறை இவர்களின் கைப்பாவையாக மாறி உள்ளது. காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.


மேலும், சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரின் பாட்டியும், சம்பவம் நடந்த அன்று உயிரிழந்துள்ளார். எனவே பாட்டியின் மரணத்தில் சந்தேகம் எழுகிறது. அவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும், சிறுமி கும்பல் பாலியல்வன்கொடுமை காரணமாக உயிரிழந்த தாக காவல்துறையினர் முதலில் தகவல்அளித்த நிலையில், தற்போது ஒருவரைமட்டுமே கைது செய்து, மற்றவர் களை காப்பாற்ற காவல்துறை முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துஉள்ளது. ஆகவே, இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும், குற்றவாளிக்கு மூன்று மாதங்களுக்குள் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே வரவில்லை. அத்தகைய கொடூரம் நடந்துள் ளது. இங்குள்ள குடியிருப்புகள் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் உள்ளது. மாலை நேரம் வந்தால் பெண்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்குகூட பெரும் அவ திக்குள்ளாக வேண்டிய சூழல்தான் இப்பகுதியில் உள்ளது. ஆகவே தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம் படுத்தி தரவேண்டும். இங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும். சிறுமியின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக அரசு அளிக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இறந்த சிறுமியின் தங்கையின் கல்விச்செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்றார்.