tamilnadu

img

திருவெறும்பூர் பகுதியில் திருநாவுக்கரசர் தீவிர பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.7-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், திருவெறும்பூர் பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, பிரதமர் மோடி தான் ஆட்சிக்கு வந்ததும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறேன் என்று பொய்யான வாக்குறுதி அளித்து அதனை நிறைவேற்றாமல் 5 ஆண்டுகளை ஓட்டி விட்டார். மோடி அரசு விதித்த ஜிஎஸ்டி வரியால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுசிறு, குறு தொழில்கள் முற்றிலும் முடங்கி விட்டன. இந்த அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. காமராஜர் ஆட்சியில் ஏராளமான தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் மோடி ஆட்சியில் அவை நசுக்கப்படுகின்றன. மக்களை பிரித்தாலும் கொள்கையை கடைபிடித்து வரும் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் நடராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சிவராஜ், ஒன்றியக் கமிட்டி உறுப்பினர் சுதாகர், ராமமூர்த்தி, யமுனாதேவி, பெல் குமார்,தரைக்கடை சங்கச் செயலாளர் சசிகுமார், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி எம்எல்ஏ மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.