tamilnadu

கேரளத்தில் ஒரே நாளில் 108 பேருக்கு கோவிட்....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் சனியன்று ஒரே நாளில் 108 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பெற்று வந்த 50 பேர் குணமடைந்தனர். தீவிர பாதிப்பு பகுதிகள்(ஹாட் ஸ்பாட்டுகள்)138 ஆக அதி கரித்துள்ளன. சனியன்று கோவிட் பாதிப்புக்கு உள்ளான 108 பேரில் 64 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 34 பேர்இதர மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். தொடர்புகள் மூலம் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் 10 பேர். சிகிச்சையில் இருந்தமலப்புறம் மாவட்டம் பரப்பனங்ஙாடியைச் சேர்ந்த ஹம்சகோயா (61) சனியன்று காலை உயிரிழந்தார். சிகிச்சையில் இருந்த 50 பேர் சனியன்று குணமடைந்தனர்.  

1029 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 762 பேர்குணமடைந்துள்ளனர். விமானத்தில்43,901 பேர், கப்பலில் 1621 பேர், சாலை வழியாக 1,17,232 பேர், ரயிலில்16,540 பேர் உட்பட கேரளத்துக்கு
1,79,294 பேர் வந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 1,83,097  பேர் கண்காணி ப்பில் உள்ளனர். இதில் 1,81,482 பேர் வீடுகள்அல்லது நிறுவன கண்காணிப்பிலும், 1615 பேர் மருத்துவமனை கண்காணிப்பிலும் உள்ளனர். சனியன்று மட்டும் 284 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.  இதுவரை 81,517  நபர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இவற்றில் 77,517  மாதிரிகள் நோய் தொற்று இல்லை எனஉறுதி செய்யப்பட்டது. மேலும், முன்னுரிமை பிரிவினரான சுகாதார ஊழியர்கள், சமூகநல ஊழியர்கள், புலம்பெயர் தொழி லாளர்கள் போன்ற சமூக தொடர்பு அதிகம் உள்ளவர்களிடம் இருந்து பெறப்பட்ட 20,769  மாதிரிகளில் 19,597 நோய் இல்லை.மறுமுறை ஆய்வு உட்பட மொத்தம் 1,07,796  மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.