tamilnadu

காரைக்குடி- திருவாரூர் ரயில் கோரி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

தஞ்சாவூர், மே 13-காரைக்குடி- திருவாரூர் ரயில் சேவையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகளின் சங்கத்தின் சார்பில் ரயில்வே வாரியத்திற்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத் தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். சங்க நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்ததாவது:காரைக்குடி- பட்டுக்கோட்டை- திருவாரூர் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவுற்று சோதனை ஓட்டம் முடிவடைந்து விட்டது. ஏழு ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்டு, தற்போது அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்து விட்டன. ஆனால் இதுவரை ரயில் சேவை தொடங்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள பயணிகள் சென்னை மற்றும் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு செல்ல அதிகமான பொருள் செலவும், கால விரயமும்செய்யும் நிலை உள்ளது. இந்த ரயில்சேவையை விரைந்து தொடங்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் ரயில் சேவை தொடங்கும் வரைதொடர் நடவடிக்கைகள், போராட்டங் கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.