tamilnadu

img

தடை செய்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தஞ்சாவூர், மே 10-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதி மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட், கடை வீதி உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) மு.பொன்னுசாமி அறிவுறுத்தலின்படி தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் அ.தேன்மொழி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீரமணி, சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதில் 35 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ3 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொட்டலங்கள் கட்ட வாழை இலை, பாக்குமட்டை தட்டு, துணிப் பை ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும் வீட்டில் இருந்து துணிப்பைகளை கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.