tamilnadu

img

பட்டுக்கோட்டை- தஞ்சை ரயில் பாதை அமைக்கப்படும்

தஞ்சாவூர், ஏப்.12-தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், பட்டுக்கோட்டை நகரில்வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.இதில் அவர் பேசியது, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் இடையேபுதிய அகல ரயில் பாதை அமைக்கவிரைந்து நடவடிக்கை எடுப்பேன். மேலும், மன்னார்குடி- பட்டுக்கோட்டை இடையே புதிய அகல ரயில் பாதைஅமைக்கும் பணிகளையும் துரிதப்படுத்துவேன். காரைக்குடி- சென் னைக்கு பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக இரவு, பகல் நேரத்திலும் விரைவு ரயில் வசதி செய்து தருவேன்.காரைக்குடி- திருவாரூர் இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கவும் விரைந்து நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், திமுக மாவட்டச் செயலர் எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஏனாதி பாலு,கா.அண்ணாதுரை, மாநிலப் பேச்சாளர்ந.மணிமுத்து, நகரப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.யோகானந்தம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.