பெரம்பலூர், ஏப்.12-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பாரிவேந்தருக்குஆதரவாக மனிதநேய மக்கள் கட்சிதலைவர் ஜவாஹிருல்லா, பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கோண்டார். இதில்அரும்பாவூரில் நடைபெற்ற கூட்டத்தில்அவர் பேசுகையில், பாஜக தேர்தல் அறிக்கை அவர்களது தோல்வி பயத்தை காட்டுகிறது. தோல்வி பயம்காரணமாக, கடந்த தேர்தலில் நாட்டின்வளர்ச்சி என பேசிய மோடி, இப்போதுவன்முறையை தூண்டும் விதமாக பேசிவருகிறார். நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க மத்தியில் ஆட்சி மாற்றம்தேவை. பாஜக தேர்தல் அறிக்கையில்சாத்தியமில்லாத பல போலியானவாக்குறுதிகள் உள்ளன. தேர்தல்ஆணையம் இன்னமும் ஒருதலைபட்சமாகவே செயல்படுகிறது. அதிமுகவினர், பாஜகவினருக்கு சாதமாக மீதமுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும் தனியாக வேறொரு நாளில் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். நம் நாடு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் தேசம். நாட்டின் நலன், மக்கள் நலன் முக்கியம் என்பதால் மதவாத பாஜகவை தோற்கடிக்க வேண்டும். எனவே தமிழகமக்கள், பாஜக, அதிமுகவுக்கு தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்றார். திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்.செல்லதுரை மற்றும்கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.