வாக்காளர் பட்டியலில் பெயரே இல்லாமல்
தேர்தல் கமிஷனிடம் புகார்
தரங்கம்பாடி, டிச.27- நாகை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாவட்ட வார்டுகள், ஒன்றிய வார்டுகள், ஊராட்சி களுக்கு வருகிற 30 அன்று தேர்தல் நடை பெறும் சூழலில் மறையூர், சித்தர்காடு இரு ஊராட்சிகள் கொண்ட 24 ஆவது ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு சிபிஎம், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பா ளர்கள் போட்டியில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலை யில் அதிமுகவின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள நித்யா (க/பெ-செந்தா) என்பவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமலே உள்ளதாகவும், முறைகேடாக ஆளுங்கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளதாக குற்றஞ் சாட்டி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டி யிடும் இளையராணி (க/பெ.உதய செல்வன்) என்பவர் கட்சியின் வட்ட செயலா ளர் சி.மேகநாதன், மாவட்டக்குழு உறுப்பி னர் டி.கணேசன் உள்ளிட்ட கட்சி தலைவர்க ளுடன் சென்று மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்றும், இல்லை யெனில் போராட்டம் நடத்துவோம் என தெரி வித்துள்ளனர். அதிமுகவின் தேர்தல் முறைகேடு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.