தஞ்சாவூர் மே.27-தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுகவேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்அமோக வெற்றி பெற்றார். தனதுவெற்றிக்கு பாடுபட்ட திமுக, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். தஞ்சாவூர் கணபதி நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகத்திற்கு திங்கள் கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வருகை தந்தார். அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் எதையும் எதிர்பாராத பிரச்சாரம்,உழைப்பு தன்னுடைய வெற்றிக்கு காரணமாக அமைந்தது” என நன்றி தெரிவித்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், வெ.ஜீவக்குமார், கே.பக்கிரிசாமி, எம்.மாலதி, சி.ஜெயபால், என்.சுரேஷ்குமார், என்.வி.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சரவணன், அரவிந்தசாமி, அருளரசன், அபிமன்னன், கே.காந்தி, என்.சிவகுரு, எஸ்.ராஜன், மாநகரச் செயலாளர் என்.குருசாமி உடனிருந்தனர்.