தமிழ்ப் பல்கலை.யின் முதல் துணைவேந்தர் நினைவு தினம் கடைபிடிப்பு
தஞ்சாவூர், ஜூன் 30- தமிழ்ப் பல்கலைக்கழகத்தின், முதல் துணைவேந்தர் முனைவர் வ.அய்.சுப்பிரமணியத்தின் 11-வது நினைவு நாள் திங்கள் கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கும், அவர் துணைவேந்தராக இருந்தபொ ழுது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், அவரால் வளர்க்கப்பட்ட மரங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தோட்டத்தில் உள்ள நினைவுக் கல்வெட்டிற்கும், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ர மணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மனு அனுப்பும் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூன் 30- மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அபிஷேகபுரம் இடைகமிட்டி சார்பில் செவ்வாயஅன்று எடமலைப்பட்டிபுதூர் பாப்பா காலனியில் உள்ள மின்வா ரிய அலுவலகம் மற்றும் வண்ணாங்கோவிலில் உள்ள மின்வா ரிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. இடைகமிட்டி செய லாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். பின்னர் தமிழக முதல்வருக்கான கோரிக்கை மனுவை மின்வாரிய அலு வலர்களிடம் வழங்கினர்.
உதிரி பாகங்கள் கடையில் திருட்டு
திருத்துறைப்பூண்டி, ஜூன் 30- திருத்துறைப்பூண்டி வேதை சாலையில் அமைந்துள்ள பிர பல இருசக்கர, நான்கு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்கப்ப டும் கடையில் திங்களன்று நள்ளிரவில் திருட்டு நடை பெற்றுள்ளது. அங்கு இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்து றையினர் அதனைக் கண்டு காவல்துறை அதிகாரியிடமும் உரி மையாளரிடமும் தகவல் கொடுத்துள்ளனர். இந்த கடையில் ஒரு லட்சத்து 38 ரூபாய் பணமும், ஒரு கம்ப்யூட்டரையும் திருடி சென்று விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.