புதுக்கோட்டை, ஏப்.24-புதுக்கோட்டையை அடுத்த நமணசமுத்திரத்தில் பஞ்சாலைத் தியாகி சண்முகத்தின் 52-வது நினைவுதினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் கே.அடைக்கன் தலைமை வகித்தார். தியாகி சண்முகத்தின் நினைவிடத்தில் மாலை வைத்து மாநிலச் செயலாளர் ஏ.பழனிச்சாமி, பொருளாளர் எஸ்.சங்கர் ஆகியோர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் ஏ.பாலசுப்ரமணியன், கே.சண்முகம்,எம்.சண்முகம், ஏ.எல்.பிச்சை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். செங்கொடியை சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.ஜியாவுதீன் ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன் மற்றும் ஏ.பி.ஆறுமுகம், எம்.ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.