தரங்கம்பாடி, செப்.6- நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியர் ஜான் சைமன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தாளாளர் டாக்டர் விக்டர் பாண்டியன், ஆசிரியர்களின் கல்விச் சேவையை பாராட்டி நினைவு பரிசு வழங்கி பேசினார். மேலும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மீனவ பஞ்சாயத்தார்கள், லயன்ஸ் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.