திருவாரூர், மே 29-தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு பள்ளிகளை பாதுகாத்திட வேண்டும். அரசு பள்ளிகளை, தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்திட வேண்டும். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகை ரூ.14 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்கவேண்டும். மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு விலையில்லா பஸ் பாஸ், மடிக்கணினி, சைக்கிள்,கல்வி உதவித்தொகை போன்றவற்றை கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை, கடலூர்,கோவை, கன்னியாகுமரி வரை 1,500 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள்பிரச்சார பயணம் மேற்கொண்டுள் ளனர்.
திருவாரூர்
இதில் மே 25-ம் தேதி கடலூரில் இருந்து புறப்பட்ட பயணத்தில் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பிரகாஷ், மாநில துணைத் தலைவர் கண்ணன், மாவட்டச் செயலாளர் சுர்ஜித் ஆகியோர் தலைமையிலான குழுவினர் திருவாரூர் வந்தடைந்தனர். மாவட்டம் முழுவதும் இந்த சைக்கிள் பிரச்சாரம்நடைபெற்று மே 31 (வெள்ளிக் கிழமை) திருச்சியில் நிறைவடைகிறது. திருவாரூர் வருகை தந்த பயணக் குழுவினருக்கு சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் மாணவர், வாலிபர் அமைப்பினர் வரவேற்பு அளித்தனர்.
குடவாசல்
செவ்வாய்க்கிழமை மாலைகுடவாசல் வந்த பிரச்சாரக்குழுவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.லட்சுமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட் டது. முன்னதாக வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே மாணவர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.கண்ணன் பிரச்சார பயணத்தின் நோக்கத்தை விளக்கிபேசினார். சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். பயணக் குழுவினருடன், மாணவர் சங்க மாவட்டச்செயலாளர் இரா.ஹரிசுர்ஜித், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சலாவுதீன், செயலாளர் ஜோதிபாசு மற்றும் ஒன்றிய-நகர பொறுப் பாளர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
தஞ்சாவூர் மாவட்ட எல்லையான திருச்சேறை பகுதியிலிருந்து செவ்வாயன்று துவங்கிய பிரச்சாரக் குழு நாச்சியார்கோயில், அம்மாசத்திரம் பகுதிகளிலும், புதன் கிழமை கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் குழந்தைகள் நினைவிடத்தில் இருந்து மகாமக குளம், காந்தி பூங்கா, தாராசுரம், பாபநாசம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக தஞ்சாவூரை சென்றடைகிறது. இந்திய மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அரவிந்த்சாமி, மாவட்டத் தலைவர் பாலகுரு, மாவட்ட துணைச் செயலாளர் ஜி.வீரையன், மாநில துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ், எம்.கண்ணன், பி.மாரியப்பன் ஆகியோர் பிரச்சார விளக்கஉரையாற்றினர். கும்பகோணத்திலிருந்து துவங்கிய பிரச்சாரக் குழுவிற்கு மாவட்ட துணைத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாநில துணைச் செயலாளர் ரமேஷ், மாணவர் சங்கமுன்னாள் பொறுப்பாளர் சின்னை.பாண்டியன் வாழ்த்துரை வழங்கினர்.