வேலூர், நவ. 30- கடந்த டிசம்பர் 25 அன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வன்முறையற்ற தமிழகம் போதை யற்ற தமிழகம் உருவாகிட வேண்டும் என திருவண்ணாமலை மற்றும் கட லூர் மாவட்டங்களில் இருந்து 400 கி.மீ நடைபயணம் நடைபயணம் துவங்கியது. ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா தலைமையிலான குழு வியாழனன்று ராணிப்பேட்டை நகரை வந்த டைந்தது. அங்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ராணிப் பேட்டை நகரில் தேசிய நெடுஞ் சாலை மீதிருந்து தோழர்கள் மலர் தூவி அவர்களை வரவேற்றனர்.
ராஜேஸ்வரி திரையரங்கம் அருகில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் மகளிர் துணைக்குழு அமைப்பாளர் அமுதா தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.வேலூர் கோட்ட நிர்வாகிகள் எஸ்.ராமன், பழனிராஜ், குமார், குணாளன், ரமேஷ் பாபு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நவல்பூர் பேருந்து நிறுத்தம் அருகில் வாலிபர் சங்க இடைக் கமிட்டி சார்பாக மாதர் சங்கத்தினரை வரவேற்று முழக்கமிட்டு கேக் வெட்டி வரவேற்பளித்தனர்.முத்துக் கடை பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகிகளான எம்பி.ராமச்சந்திரன், எஸ்.பரசுராமன், என். காசிநாதன், பாபு இந்திய தொழிற் சங்க மையத்தின் சார்பிலும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் வி.குபேந்தி ரன், சி.ஞானசேகரன் சார்பிலும் வரவேற்பளிக்கப்பட்டது. வாலாஜா நகராட்சி அருகில் தமு எகச ராணிப்பேட்டை கிளை தலைவர் த.ரஜினி தலைமையில் சுரேந்திரன், குணசேகரன், எல்.சி.மணி உள்ளிட்ட தோழர்கள் வரவேற்பளித்தனர்.வாலாஜா பேருந்து நிலையத்தில் மாதர் சங்க தாலுக்கா செயலாளர் கீதா தலைமையில் நடைபெற்ற பொதுக்ககூட்டத்தில் தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆத வன் தீட்சண்யா கலந்து கொண்டு நடைபயண கோரிக்கைகள் வெற்றி பெற வாழ்த்தி பேசினார்.வாலாஜா வில் ஆறாம் நாள் பயணத்தை துவக்கிய தோழர்களுக்கு காவேரி பாக்கம் காவல் நிலையம் எதிரில் அரக்கோணம் சிஐடியு சார்பில் செ.ஏகலைவன், சி.துரைராஜ், ஏபிஎம்.சீனிவாசன் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் லட்சுமணன், ஜெகன், பார்த்திபன்பட்டாசு வெடித்தும், பழங்கள் வழங்கியும் வரவேற்பளித்தனர்.
சிஐடியு வாழ்த்து
காவேரிபாக்கம் பேருந்து நிலையம் அருகே நடைபயணக்குழு வினருக்கு சிஐடியு சங்கத்தின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன் கதர் ஆடை அணிவித்து கோரிக்கை வெற்றி பெற வாழ்த்தி பேசினார். மாதர் சங்க நடைபயணத்தில் இரண்டு முக்கிய கோரிக்கைகளான போதையற்ற தமிழகம் என்ற கோரிக்கையானது இன்றைய இளை ஞர்களின் வாழ்வை சீரழிக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வதற்கான முக்கியமான கோரிக்கை என்பது மட்டுமல்லாமல் இளைஞர் களையும் தமிழகத்தையும் பாது காத்திட உதவிடும்.அண்டை மாநில மான கேரளா அரசு போதையி லிருந்து இளைஞர்களை மீட்டெ டுக்கும் பள்ளிகளை நடத்தி வரு கின்றனர்.
ஆனால் தமிழக அரசோ கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு செல வழிக்காமல் டாஸ்மாக் கடைகளை நடத்தி கொள்ளை லாபம் சம்பாதிப்ப தோடுஅரசு நிர்வாகத்தையும் அப்பணத்திலேயே நடத்தி வரு கிறது என்பது மிக மோசமான செய லாகும். எனவே போதையற்ற தமிழகம் என்ற வலுவான கோரிக்கை நிச்சயம் வெற்றி பெறும், அரசை சிந்திக்க வைக்கும் உங்கள் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.