திருச்சிராப்பள்ளி, ஆக.17-திருச்சி புறநகர் மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் சிறுநாவலூர் ஊராட்சியில் நூறு நாள் வேலையில் தொழிலாளர்கள் அனைவருக்கும் தொடர்ந்து நூறு நாள் முடியும் வரை வேலை கொடுக்க வேண்டும். தினமும் அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும். சாக்கடைகளை தூர்வாரி கொசுமருந்து அடிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க சிறுநாவலூர் கிளைகள் சார்பில் வெள்ளியன்று ஊராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஜோதி தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி விச மாவட்ட தலைவர் ராமநாதன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், விதொச ஒன்றிய செயலாளர் கணேசன், விச பாலசுப்ரமணியன், விதொச ஒன்றியக்குழு உறுப்பினர் ஜி.முத்துக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.முத்துக்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட க்குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் பேசினர். மனோகரன், அன்னகாமு, அமுதா, ராஜேஸ்வரி, ரேவதி, ராஜேஸ்வரி, சுபித்ரா, கவிதா கலந்து கொண்டனர்.