tamilnadu

img

ஜன.8 வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 20 துப்புரவுத் தொழிலாளர் பணிநீக்கம் தொடர் போராட்டம்  அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி, ஜன.12- பாஜக அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள்  விரோத போக்கை கண்டித்து கடந்த 8 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் திருச்சி மாநகராட்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பணிபுரியும் சுய உதவிக்குழு துப்புரவு தொழி லாளர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். இதனால் இவர்களை பழிவாங்கும் எண்ணத்துடன் அரிய மங்கலம் கோட்ட உதவி ஆணையர் திருஞானம் மற்றும் சுகாதார ஆய்வாளர் பரசுராமன், ஸ்ரீரங்கம் கோட்ட சுகாதார ஆய்வாளர் டேவிட் ஆகியோர் திட்டமிட்டு 20 தொழிலாளர்களையும் வேலை நீக்கம் செய்தனர்.  இதனை கண்டித்தும் வேலை நீக்கம் செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா தலைமையில் கடந்த ஜன.10 அன்று மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் ஜன.11 அன்று காந்தி மார்கெட் தர்பார் மேடு உள்ளே தொடர் வேலை நிறுத்தப் போராட்ட த்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் கிழக்கு தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பேச்சுவார்த்தையில் துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன், பொறுப்பாளர் ராஜூ, சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால்,  மலைக்கோட்டை பகுதிக்குழு உறுப்பினர் ஜெய் சங்கர், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் மோகன், காந்திமார்க்கெட் உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில், ஞாயிறன்று துப்புரவு தொழிலாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண்பது. அதுவரை துப்புரவு பணிக்கு புதிய ஆட்களை நிய மிக்காமல் இருப்பது என முடிவானது. இதனை யடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் ஞாயிறறு காலை துப்புரவு பணிக்கு புதிய ஆட்களை நியமித்து துப்புரவு பணி களை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த துப்புரவு தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் கூறிய படி பிரச்சனைக்கு தீர்வு காணாமல் புதிய ஆட்களை  நியமித்து வேலை செய்வது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் பதி லளிக்காததால் காந்தி மார்க்கெட் மணிக்கூண்டு பகு தியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கிழக்கு தாசில்தார் அலு வலகத்தில் தாசில்தார் மோகன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் எவ்வித தீர்வும் எட்டப்படாததால் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நியாயம் கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா தெரிவித்தார்.