tamilnadu

img

கறவை மாடுகளுடன் முற்றுகைப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி,ஜூலை 2- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநிலக்குழு கூட்டம் செவ்வாய் அன்று திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முக மதுஅலி தற்போதைய நிலைமையில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் நெருக்கடி குறித்து சிறப்புரையாற்றி னார். கூட்டத்தில் கால்நடை தீவனங்க ளின் விலைஉயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை அரசு கருத்தில் கொண்டு பசும்பாலுக்கு ரூ.28 லிருந்து ரூ. 40ஆகவும். எருமை பாலுக்கு ரூ.35லிருந்து ரூ. 50ஆகவும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன் கறவை மாடுகளுடன் முற்றுகை போராட்டம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  கூட்டத்தில் பொருளாளர் சங்கர், செயலாளர்கள் ராமநாதன், செல்ல துரை, பூபதி, முத்துசாமி, ரவிச்சந்தி ரன், பொன்னுச்சாமி, அண்ணாதுரை, அரியாகவுண்டர், விஜயகுமார், தங்க ராஜ், சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் சிதம்பரம் நன்றி கூறினார்.